முறைகேடு புகார்-மாணவர்களின் முன்பே மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு - Agnipuratchi

முறைகேடு புகார்-மாணவர்களின் முன்பே மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

Share This

முறைகேடு புகார் தொடர்ந்து எழுந்து வருவதால் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டை மாணவர்கள் முன்னிலையிலேயே செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி ஆகிய மூன்று பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால் அந்தந்த மாணவர்கள் முன்னிலையிலேயே விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் புதிய முறை நடப்புப் பருவம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. மறுமதிப்பீடு செய்யும் குழுவில் பாடம் கற்பித்தவர், அனுபவம் வாய்ந்த பேராசிரியர், துறைத்தலைவர் ஆகிய மூவர் இருப்பர். மாணவர் முன்னிலையில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் போது, மாணவரின் ஐயம் தீர்வதுடன், ஏன் மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டது⁉ உள்ளிட்ட வினாக்களுக்குக் குழுவில் உள்ளவர்கள் பதிலளிப்பர். இந்தப் புதிய முறை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 471 இணைப்புக் கல்லூரிகளுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மறுமதிப்பீட்டில் விடைத்தாள் திருத்தும்காலநேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages