தருமபுரி மாணவி பலாத்கார வழக்கு-ஒருவர் கைது - Agnipuratchi

தருமபுரி மாணவி பலாத்கார வழக்கு-ஒருவர் கைது

Share This

வெளியூரில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த, தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தை சேர்ந்த பிளஸ்டூ மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன் தீபாவளி பண்டிகைக்காக அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இந்நிலையில், காலைக் கடன்கலைக் கழிப்பதற்காக அவரது வீட்டின் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற அந்த பெண்ணை பின்தொடர்ந்த சதீஷ், ரமேஷ் என்பவர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க போராடிய மாணவியை கடுமையாக தாக்கி பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்றனர். இதில் மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 10ம் தேதி அமரணமடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வந்த நிலையில், நேற்று சதீஷ் என்னும் நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், மாணவி விவகாரத்தில் விசாரணை நடத்தி வந்த கோட்டப்பட்டி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மாற்றப்பட்டு, அரூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகஅங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages