பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு-அடுத்தடுத்த சர்ச்சையான தகவல்கள் - Agnipuratchi

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு-அடுத்தடுத்த சர்ச்சையான தகவல்கள்

Share This

மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கைது⛓ செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் வண்ணம் உள்ளது என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்காக தான் மாணவிகளை அழைத்ததாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது நிர்மலா தேவியை மிரட்டி பெறப்பட்ட வாக்குமூலம் என்றும், எனவே பாலியல் பேர விவகாரத்தில் உண்மைகள் வெளிவர வேண்டுமானால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் குற்றசாட்டுக்கு ஆளானோர் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. மேலும், சிறையில் உள்ள நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதையடுத்து சாட்சியங்களை ரகசியமாக விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஓரிரு நாட்களில் 31 முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages