சேலம் உருக்காலை நஷ்டத்தில் ஓடுகிறது-மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு - Agnipuratchi

சேலம் உருக்காலை நஷ்டத்தில் ஓடுகிறது-மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

Share This

சேலம் உருக்காலையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய உருக்கு மற்றும் எஃகு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்திரசிங் தமிழகத்தில் மின்கட்டணம் அதிகமாக இருப்பதால் தான் சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, மின்சார கட்டணத்தை குறைத்திட பலமுறை கோரிக்கை வைத்தும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சார கட்டணத்தை குறைத்திடும் வகையில் 50 மெகாவாட் மின்உற்பத்தி கொடுக்கும் வகையில் சோலார் திட்டத்தை சேலம் உருக்காலையில் செயல்படுத்த திட்டம் உள்ளது" என்று கூறியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த சேலம் உருக்காலை ஆண்டுதோறும் ரூ.200 கோடி வரை நஷ்டத்தில் இயங்கி வருவது வேதனையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages