கஜா' புயல்-ஆந்திர மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் - Agnipuratchi

கஜா' புயல்-ஆந்திர மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ்

Share This

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'கஜா' புயலாக உருவெடுத்ததையடுத்து, 2, 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், அடுத்த 3 நாட்களில் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து வரும் 14ம் தேதி மாலை முதல் தெற்கு ஆந்திரா- வடதமிழகத்திற்கு இடையே, இந்த கஜா புயல் கரையை கடக்கும் என்பதால் ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயலின் வேகம் குறைந்ததால் ஆந்திராவுக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages