முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் இன்று காலை தொடங்கிய கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் விரதத்தைத் தொடங்கினர். கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், ஐந்தரை மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர். இந்த முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 13ம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா துவக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment