ஜனவரி முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - Agnipuratchi

ஜனவரி முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

Share This

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே தமிழக சட்டப்பேரவை ஜனவரி முதல் வாரத்தில் கூடவுள்ளது. தமிழக சட்டபேரவை கடந்த மே 29ம் தேதி தொடங்கி, ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடர் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் அடுத்த பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி. இதனால், 15வது சட்டப்பேரவையின் 5வது கூட்டத்தொடர் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள ஆண்டின் முதல் கூட்டத்தொடர், 5 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்த கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages