சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி அல்ல-கால்நடை மருத்துவ கல்லூரி - Agnipuratchi

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி அல்ல-கால்நடை மருத்துவ கல்லூரி

Share This

கடந்த 17ம் தேதி ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்த ஜோத்பூா் ரயிலில் பதப்படுத்தப்பட்ட பெட்டியில் இறைச்சிகள் கொண்டு வரப்பட்டன. அவை பாா்ப்பதற்கு நாய் போன்ற தோற்றத்தில் இருந்ததால் அவை நாய் இறைச்சி என்று கூறப்பட்டது. முதலில் ஆயிரம் கிலோ என்று சொல்லப்பட்டது. பின்னா் அது 2,100 கிலோ என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து அந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அவற்றை சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பினா். தற்போது, இது தொடா்பாக சென்னை கால்நடை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்டவை நாய் இறைச்சி கிடையாது. அவை செம்மறி ஆட்டின் இறைச்சி தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனா்என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages