தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவான இந்த அறிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரித் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது சட்ட விரோதம் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் விசாரணை இன்று நீதிபதிகள் முன்னிலைக்கு வந்தது. அப்போது, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையை ஏற்பதும் ஏற்காததும் தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாநில, மத்திய அரசு இடையே உள்ள இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தான் விசாரிக்க முடியும் என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Home
அண்மை செய்திகள்
தூத்துக்குடி நிலத்தடிநீர் மாசுக்கு ஸ்டர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை-மத்திய அரசு
தூத்துக்குடி நிலத்தடிநீர் மாசுக்கு ஸ்டர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை-மத்திய அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment