2018-க்கு விடைகொடுப்போம், 2019-ஐ வரவேற்போம் புத்தாண்டு பொதுக்குழு! - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு - Agnipuratchi

2018-க்கு விடைகொடுப்போம், 2019-ஐ வரவேற்போம் புத்தாண்டு பொதுக்குழு! - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு செயற்குழு - பொதுக்குழுக் கூட்டங்கள்,‘‘2018-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2019-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பில் திசம்பர் 29 மற்றும் 30&ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.  

புத்தாண்டு சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒரு மண்டலத்தில் நடத்துவதென எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கடந்த ஆண்டு புத்தாண்டு பொதுக்குழு மதுரையில் நடத்தப்பட்டது. நடப்பாண்டிற்கான புத்தாண்டு செயற்குழு - பொதுக்குழு கூட்டங்கள் கொங்கு மண்டலத் தலைநகரமான கோவையில் நடைபெறவுள்ளன. கோவை வரதராஜபுரம் உப்பிலிப்பாளையம் சாலையில் எண் 63 என்ற இலக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீசாய் விவாக மகாலில் இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

29.12.2018 சனிக்கிழமை  காலை 10.00 மணிக்கு தலைமைச் செயற்குழு  கூட்டம் நடைபெறும். 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம்  நடைபெறும். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் செயற்குழு& பொதுக்குழு கூட்டங்களுக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்  பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். செயற்குழுக் கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலர்கள், பொருளாளர்கள், அணிகளின் மாநிலச் செயலர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பர்.

பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

 இந்தக் கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார். 2018-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2019-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்து இந்தப் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது. 2019-ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால்  அதுகுறித்த விவாதங்களும் புத்தாண்டு சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் நடைபெறும்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages