மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் வேதாங்கி குல்கர்ணி சைக்கிளில் குறைந்த நாள்களில் உலகை வலம்வந்த ஆசியாவைச் சேர்ந்தவர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். இங்கிலாந்தின் பார்னேமோத் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் வேதாங்கி, உலகைச் சைக்கிளில் சுற்றும் தனது பயணத்தை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கினார். பயணித்தின் இறுதிப் பகுதியாக அவர் இன்று அதிகாலையில் கொல்கத்தா நகரை வந்தடைந்தார். தனது பயணத்தைத் தொடங்கிய இடமான பெர்த் நகருக்கு இன்று இரவு விமானத்தில் பயணிக்கும் அவர், அங்கு 15 கி.மீ. சைக்கிளில் பயணித்து உலகைச் சுற்றும் பயணத்தை அதிகாரபூர்வமாக நிறைவு செய்கிறார். 29,000 கி.மீ சைக்கிள் பயணத்தை முடிக்க அவர் 159 நாள்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். தினசரி 300 கி.மீ என்ற சராசரியில் பயணித்த அவர், 14 நாடுகள் வழியாக உலகைச் சுற்றி வந்திருக்கிறார். இது முந்தைய சாதனையை விட மூன்று வாரங்கள் குறைவு ஆகும். இந்த முயற்சிக்கு பெற்றோர் அளித்த ஆதரவு வார்த்தைகள் விவரிக்க முடியாதது என்று கூறியுள்ள வேதாங்கி 'சாதனைகள் படைக்க வேண்டும் என்ற நமது ஆர்வத்தை என்றுமே அடக்கி வைக்கக் கூடாது என்று நெகிழ்ந்திருக்கிறார்.
29,000 கி.மீ பயணித்து சைக்கிளில் உலகைச் சுற்றிய புனே இளம்பெண்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment