திருச்சியில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம்-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு - Agnipuratchi

திருச்சியில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம்-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு

Share This

திருச்சியில் நடைபெறவுள்ள விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கும் வகையிலான மத்திய அரசின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையை கண்டித்தும், அறிக்கை தயார் செய்ய கர்நாடகாவுக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்திட திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இதனையடுத்து திருச்சியில் வரும் 4ம் தேதி நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு வெற்றியடைய செய்ய வேண்டும்  என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages