உலக எய்ட்ஸ் தினம்-தமிழக முதல்வரின் அறிக்கை - Agnipuratchi

உலக எய்ட்ஸ் தினம்-தமிழக முதல்வரின் அறிக்கை

Share This

உலகம் முழுவதும் இன்று, டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ‘எய்ட்ஸ்’ இல்லாத நிலைமையை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார். மேலும், "தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் எச்.ஐ.வி. பரிசோதனை சிகிச்சையை விரிவுபடுத்துவதற்கும், தமிழகம் எங்கும் எச்.ஐ.வி. தொற்றை கண்டறிய 2,561 நம்பிக்கை மையங்களும், 15 நடமாடும் நம்பிக்கை மையங்களும் மற்றும் 2 நடமாடும் எச்.ஐ.வி.-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாகனங்களும் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 194 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages