கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசு அனுமதி கோரிய நிலையில், அண்மையில் கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு, மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மேலும், அணைக்கான ஆய்வு நடத்தவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் கர்நாடக அரசுக்கு அனுமதி தந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்ட தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்த ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தமிழக அரசு வழக்கறிஞர் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் மனு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு ஏற்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment