துபாயில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்கள் அபராதம், நாடு கடத்தல் உள்ளிட்ட தண்டனைகளை சந்திக்க நேரிடும் என துபாய் போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
துபாயில் அனுமதியில்லாத, சட்டவிரோதமாக டேக்ஸி சேவையை வழங்குபவர்கள் 20,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சிறை தண்டனைக்குப்பின் நாடு கடத்தப்படுவார்கள் என துபாய் போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
முதன்முதலாக இந்த குற்றத்தை செய்பவர்கள் 20,000 திர்ஹம் அபராதத்துடன் கள்ள டேக்ஸிக்களாக பயன்படுத்தப்பட்ட கார்களையும் இழக்க நேரிடும். இதே குற்றத்தை தொடர்ந்து 3 அல்லது 4 முறை செய்தவர்கள் கண்டிப்பாக நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் துபை டெர்மினல் 1ல் இருந்து டெர்மினல் 3க்குச் செல்ல அனுமதிப்பெற்ற டேக்ஸிக்களில் வாங்குவதைவிட 3 மடங்கு கட்டணமும், ஒரு பிரிட்டீஷ் பெண்ணிடம் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குச் செல்ல 500 திர்ஹம் கட்டணம் வசூலித்த புகார் வந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மேற்படி டிரைவர்கள் பிடிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment