மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டதால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொறுப்பிலிருந்து டி.கே.ராமச்சந்திரனை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய அரசின் கப்பல் போக்குவரத்துறை அமைச்சகம், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவராக டி.கே.ராமச்சந்திரன் நியமித்திருப்பதால், அதற்கு ஏதுவாக, அவர் வகித்து வந்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநராக உள்ள பணீந்திர ரெட்டிக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாகவும், கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவியிலிருந்து டி.கே.ராமச்சந்திரன் விடுப்பு-தமிழக அரசு
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவியிலிருந்து டி.கே.ராமச்சந்திரன் விடுப்பு-தமிழக அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment