தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சென்ற வாரம் முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்குமான அரையாண்டு வினாத்தாள்கள், தேவகோட்டை அரசு பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை காவலாளி இல்லாத சமயத்தில் மாணவர்கள் சுவர் ஏறி குதித்து அந்த வினாத்தாள்களை செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பியதாக புகார் எழுந்தது. ஆனால் இது குறித்து அந்த பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மதுரையில் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்களும் வாட்ஸ் அப்பில் வெளியான வினாத்தாள்கள் தான் தேர்வறைகளில் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்கள். இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் தமிழ் மற்றும் ஆங்கில வினாத்தாள்களை தவிர மற்ற வினாத்தாள்கள் பரவியதற்கும் மாணவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், மற்ற வினாத்தாள்கள் எதுவும் புகைப்படம் எடுக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்வி அதிகாரிகள் மற்ற வினாத்தாள்களை மாற்றவும் தேர்வுகளை ஒத்திவைப்பு குறித்தும் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரையாண்டு வினாத்தாள்கள் வாட்ஸ் அப்பில் லீக் -போலீஸ் விசாரணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment