அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா-பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் - Agnipuratchi

அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா-பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Share This

அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் கடந்த 12 ம் தேதி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வாலால் தாக்கல் செய்யப்பட்டது. அணைகள் பாதுகாப்பு மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்குள் வராது என்றும் கூறி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் தற்போது இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு தேசிய அணை பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெறக்கோரி கடிதம் எழுதி உள்ளார். அதில், அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும். தேசிய அணை பாதுகாப்பு மசோதாவில் பிரதமர் உடனே தலையிட வேண்டும். மேலும் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமல் மக்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக நலன் குறித்து அணை பாதுகாப்பு மசோதாவில் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages