ரயில்வே உணவக ஊழல் வழக்கு-லாலு பிரசாத்துக்கு இடைக்கால ஜாமீன் - Agnipuratchi

ரயில்வே உணவக ஊழல் வழக்கு-லாலு பிரசாத்துக்கு இடைக்கால ஜாமீன்

Share This

லாலுபிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய ரயில்வே மந்திரியாக இருந்த நிலையில், ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக கூறி, லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனி தனியே வழக்குப்பதிவு செய்தது. இதன் விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனையடுத்து இன்று நடந்த லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அங்கிருந்தே வீடியோ கான்பரசிங் மூலம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, லாலுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages