புதிய தலைமை செயலகம்-தமிழக அரசின் ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் - Agnipuratchi

புதிய தலைமை செயலகம்-தமிழக அரசின் ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

Share This

கடந்த 2006-2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய தலைமைச் செயலாகம் கட்டப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, இது தொடா்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து, அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி, துணைமுதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சா் துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அந்த சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னா் ஆணையம் திரட்டிய தகவல்களை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், குற்றம் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது. தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோா் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages