முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையினை ஆறுமுகசாமி ஆணையம் நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பிரமுகர்கள் பலருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அறைக்கு வெளியே சுமார் 50 நாட்கள் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவரும் அவர்தான். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அவரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது இதனையடுத்து ஓபிஎஸ் வரும் 20ம் தேதி ஆணையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல், செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆஜராகியுள்ள நிலையில், வரும் 18ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக ஓபிஎஸ்'க்கு சம்மன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment