வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம்-பசுமை தீர்ப்பாயம் உத்தரவு - Agnipuratchi

வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம்-பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Share This

வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்தியாவில் 3.23 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனம் காற்று வெளியேற்றும் சோதனையில் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஆய்வு நடத்தியதில், மோசடி என்று கூறப்படும் கருவியானது டீசல் என்ஜின்களில் இருந்து காற்று வெளியேறும் அளவை குறைத்து காட்டி உலக அளவில் காரின் செயல்திறனை உயர்த்தி காட்டும் வகையிலான சாப்ட்வேராக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தியது பற்றிய விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 16ல் இந்நிறுவனம் ரூ.100 கோடி தொகையை இடைக்கால தொகையாக செலுத்தும்படி நீதிபதி ஆதர்ஷ் குமார் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராத தொகையை நாளை மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages