ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி 1.5 லட்சத்திற்கும் மேலான மனுக்கள் - Agnipuratchi

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி 1.5 லட்சத்திற்கும் மேலான மனுக்கள்

Share This

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து வேதாந்த நிறுவனம் செய்த மேல்முறையீட்டு நடவடிக்கையினை அடுத்து, ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களை மினி லாரியில் எடுத்துக்கொண்டு சென்னை வந்த ஆலை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்ற அவர்களின் பிரதிநிதிகள் 10 பேர்
மனுக்களை முதலமைச்சரின் தனிப் பிரிவில் அளித்து விட்டு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages