வரும் 27ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி-சுஸ்மா ஸ்வராஜ் - Agnipuratchi

வரும் 27ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி-சுஸ்மா ஸ்வராஜ்

Share This

சென்னை தியாகராயநகரில் தட்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவின் 82ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தி மொழியின் சிறப்புக்களை எடுத்துரைத்தார். பின், தியாகராயநகரில் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றிய அவர், குறிப்பிட்ட சில கட்சிகளை போன்று தேர்தல் நேரத்தில் அதை கொடுப்போம் இதை கொடுப்போம் என்று சொல்லாமல், நீண்ட கால நலத்திட்டங்களையும் கொடுப்போம் என மக்களிடம் எடுத்துரைக்குமாறு கூறினார். பிரதமர் மோடிக்கு ராகுல் போட்டியில்லை எனக் கூறிய அவர், ராகுல் அம்மாவுக்கு பிள்ளை என்பது தவிர அவர் வேறு ஒன்றுமில்லை என கருத்து தெரிவித்தார். சாதாராண ஏழை வீட்டில் பிறந்து படிப்படியாக உயர்ந்து இன்று மோடி பிரதமராக உயர்ந்துள்ளார் மோடி என்றும், ராகுல் பெரிய குடும்பத்தில் பிறந்து நேரடியாக உயர துடிப்பவர் என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages