பணிகள் முடிவடையாத வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் 4 புது சுங்கச்சாவடிகள் - Agnipuratchi

பணிகள் முடிவடையாத வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் 4 புது சுங்கச்சாவடிகள்

Share This

சென்னை பெருநகருக்குள் எந்த பக்கம் இருந்து நுழைந்தாலும் சுங்கக்கட்டணம் செலுத்திய ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. போரூர், கிழக்கு கடற்கரைச்சாலை, ராஜீவகாந்தி சாலை என மாநகரை சுற்றிலும் தற்போது 9 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த வரிசையில் தற்போது, 63 கிலோமீட்டர் தூரம் கொண்ட வண்டலூர்-மீஞ்சூர் இடையிலான வெளிவட்ட சாலையும் சேர்ந்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மதிப்பு 2,160 கோடி ரூபாயாகும். சாலை அமைக்கும் பணி நிறைவடையாத நிலையில் 4 இடங்களில் சுங்கச்சாவடி அமைப்பதில் தமிழக சாலைகள் மேம்பாட்டு நிறுவனம் தீவிரம் காட்டுகிறது. இதற்கிடையே, வெளிவட்டச்சாலை முழுமை பெறாத நிலையில் அங்கு 4 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவற்றையும் சேர்த்தால் சென்னை பெருநகருக்குள் நுழைவதற்கான சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages