பொங்கல் கொண்டாட்டம்-ரூ.500 கோடியை தாண்டிய டாஸ்மாக் மது விற்பனை - Agnipuratchi

பொங்கல் கொண்டாட்டம்-ரூ.500 கோடியை தாண்டிய டாஸ்மாக் மது விற்பனை

Share This

பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆண்டு போகி பண்டிகையன்று 143 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு இந்த விற்பனை 133 கோடியாக இருந்தது. அதேபோன்று பொங்கல் தினமான 15ம் தேதி, 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16ம் தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. காணும் பொங்கல் தினமான 17ம் தேதி, மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. இதனால், இந்த ஆண்டு மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டும். இது, கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீத உயர்வு ஆகும் என்று தெரிவித்தார். கடந்த தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages