மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களது 102 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக் குமார் தலைமையில் கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அசோக்குமார் கூறுகையில், ஆனைக்கல் முதல் ஓமலூர் வரையிலான ஒரு வழி ரயில் பாதையை இருவழி பாதையாக மாற்றுவதற்கு 324 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகம் நடைபெறும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு 5 வெவ்வேறு இடங்களில் நடை மேம்பாலம், பிரிவு சாலைகள் மற்றும்தென்னையம் பட்டி சந்திப்பு மேம்பாலம் ஆகியவை அமைப்பதற்கு ரூபாய் 24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கிருஷ்ணகிரி திண்டிவனம் வரையிலான நெடுஞ்சாலை ரூபாய் 512 கோடி மதிப்பில் ஒரு சில நாட்களில் டெண்டர் விடப்பட்டு அங்கே அந்த பணிகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலர்கள் ஏற்றுமதி நிலையம் தொழிலாளர்களுக்கான எம்பிளாய்மெண்ட் ஓய்வூதிய அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்டவை விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை-ரூ.512 கோடி நிதி ஒதுக்கீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment