முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், குடியரசுத் தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கும் வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் முதல்வர். இதேபோல, பிரதமர் நரேந்திர மோடிக்கும் மலர்கொத்துடன் முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நாட்டுக்கு சேவையாற்ற பல்லாண்டுகளுக்கு இறைவன் நல்ல உடல்நலத்தை பிரதமருக்கு அருள் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கும் முதல்வர் தனது சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவருக்கு முதல்வர் புத்தாண்டு வாழ்த்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment