பணியிடத்தில் செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பல காவலர்கள் பணியின் போது தேவையின்றியும் அளவுக்கு அதிகமாகவும் செல்போன் பயன்படுத்திகிறீர்கள். இதனால் பணியில் தகவலை பெறுதல், சிந்தனை, கவனம், செயல்வேகம், உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போகிறது. மேலும் போக்குவரத்து ஒழுங்கின் போது செல்போன்கள் பயன்படுத்துவதால் வீதிமீறல்களை கவனிக்க முடியாமலும், தவறு செய்பவர்களை பிடிக்க முடியாமலும் போகிறது. இனி முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு, போராட்டங்கள், பண்டிகைகள், ரோந்து, விசாரணை, போக்குவரத்து ஒழுங்கு உள்ளிட்ட பணிகளின் போது உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ளவர்கள் செல்போன்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவலர்கள் பணியிடத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை-டி.கே.ராஜேந்திரன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment