தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம்-தலைமை வழக்கறிஞரிடம் கருத்து - Agnipuratchi

தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம்-தலைமை வழக்கறிஞரிடம் கருத்து

Share This

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் ஆலையை உடனடியாக திறக்க ஏதுவாக சீலை அகற்றி, ஆலை செயல்படத் தேவையான அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம், தமிழக தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. இதேபோன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அந்நிறுவனம் எழுதிய கடிதத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ள 25 நிபந்தனைகளை செயல்படுத்த ஏதுவாக ஆலையின் சீலை அகற்றி, தேவையான அனுமதி தர கோரியிருந்தது. இந்நிலையில் இந்த கடிதம் தொடர்பாக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம், தமிழக அரசு கருத்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages