ஸ்டர்லைட் விவகாரம்-விசா விதிகளை மீறிய அமெரிக்க இளைஞர் - Agnipuratchi

ஸ்டர்லைட் விவகாரம்-விசா விதிகளை மீறிய அமெரிக்க இளைஞர்

Share This

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மார்க் சியல்லா என்பவர் கடந்த 27ஆம் தேதி தூத்துக்குடி வந்து ஸ்டெர்லைட்எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற கிராமங்களுக்குச் சென்று எதிர்ப்பாளர்களுடன் பேசியுள்ளார். அவருக்கு உதவியாக தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர் உடன் சென்றிருக்கிறார். மார்க் சியல்லாவின் இந்த நடவடிக்கைகள் பற்றி அறிந்த போலீசார் மார்க் சியல்லாவுக்கு உதவிய பிரின்ஸிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மார்க் ஒரு பத்திரிகையாளர் என்றும் அவருக்கு தமிழ் தெரியாததால் மொழிபெயர்ப்புக்காக அவருடன் சென்றதாகவும் பிரின்ஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் மார்க் சியல்லா சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்ததும், விசா காலம் ஜனவரி மாதம் 21 வரை இருப்பதனையும் கண்டறிந்தனர். பத்திரிகையாளர்களுக்கு என தனியாக விசா வழங்கப்படும் நிலையில் சுற்றுலா விசாவில் வந்து, செய்தி சேகரித்துள்ளார் என்பதனால் அவரது விசா, இந்திய குடியுரிமை அதிகாரிகள் மூலம் நேற்று ரத்து செய்யப்பட்டது. மேலும் அவரை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா நோட்டீஸ் கொடுத்தார். அதன்பேரில் மார்க்க சியல்லா நேற்று மாலை 6.15 மணிக்கு மதுரை புறப்பட்டார். மேலும் அங்கிருந்து அவர் விமானம் மூலம் ஹைதராபாத் சென்று கத்தார் வழியாக அமெரிக்கா செல்வதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages