பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைக் கண்டித்து ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பினர் கடந்த 21ம் தேதி வெள்ளிகிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவை கடுமையாக பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். மேலும், இந்த இணைப்பின் மூலம் இவ்வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் வங்கித்துறையில், மூன்று வங்கிகளை இணைத்துள்ளது இதுதான் முதல் முறையாகும். இந்த வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment