மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது - Agnipuratchi

மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது

Share This

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம்' என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் திருவண்ணாமலை மாவட்ட கலேக்டர் கந்தசாமி இந்த விருதினை பெற உள்ளார். இதற்கு முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாவட்ட அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்டங்களில், தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. 2016-17ம் ஆண்டில் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் சிறப்பு முயற்சியாக தடுப்பணை கட்டுதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மீள் நிரப்புத் தண்டு அமைத்தல் போன்ற இயற்கை வள மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய விருது அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages