கோடநாடு விவகாரம்-சிபிஐ விசாரணைக்கு கோரப்பட்ட வழக்கு தள்ளுபடி - Agnipuratchi

கோடநாடு விவகாரம்-சிபிஐ விசாரணைக்கு கோரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Share This

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் "கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் சாதாரண சம்பவங்கள் அல்ல. இதற்கும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறி, டிராபிக் ராமசாமி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages