தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை - Agnipuratchi

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை

Share This

தமிழக தேர்தல் அதிகாரியுடன் தலைமை தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி., வருமானவரி அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை, வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலைப்பற்றி தலைமை தேர்தல் ஆணையர் விவாதித்தார். தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தயார் நிலையில் உள்ளனரா⁉என்றும் தலைமை தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார். திட்டமிட்டப்படி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 31ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். மேலும், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றும், எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையருடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின் போது சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages