சர்வதேச ஓபன் செஸ் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சென்னை மாணவர் டி.குகேஷ் நேற்று முன்தினம் தனது 9-வது சுற்று ஆட்டத்தின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். 12 வயது 7 மாதம் 17 நாட்களில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தனதாக்கி உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்ற 2வது வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவரான பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை குகேஷ் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். குகேசின் தந்தை ரஜினிகாந்த், தாயார் பத்மா ஆகியோர் டாக்டர்கள் ஆவர். இந்தியாவின் 59வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்து இருக்கும் குகேஷ் அளித்த பேட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை எட்டிய செர்ஜி கர்ஜாகின் சாதனையை தகர்க்க முடியாமல் போனது லேசான ஏமாற்றம் அளிக்கிறது" என்று தெரிவித்தார். கடந்த 2002-ம் ஆண்டில் உக்ரைன் வீரர் கடந்த 2002-ம் ஆண்டில் உக்ரைன் வீரர் செர்ஜி கர்ஜாகின் 12 வயது 7 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதே உலக அளவில் சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டம் வென்ற குகேஷின் வீடியோ பதிவு இதோ உங்களுக்காக
http://v.duta.us/rDkdkQAA
கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார் சென்னை மாணவர் டி.குகேஷ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment