அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்களது இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விண்ணப்பங்களை ஆசிரியர் பயிற்சி முடித்த ஏராளமான பட்டதாரிகள் வாங்கி, பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்று, அதை ஆய்வு செய்து, பாடவாரியாக பிரிக்க 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இதுவரை 1,300 பேர் வழங்கியுள்ளனர். அவர்களில் 600 பேர் தகுதியுடைய விண்ணப்பதாரர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்களில், 600 பேரும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என்ற உத்தரவினை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி கேட்கும் இடத்தில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தால் அந்த இடம் காலியாக கருதப்பட்டு அங்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம்-பள்ளிக்கல்வித்துறை
பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம்-பள்ளிக்கல்வித்துறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment