ஆதார் சட்ட திருத்த மசோதா-மத்திய அரசு தகவல் - Agnipuratchi

ஆதார் சட்ட திருத்த மசோதா-மத்திய அரசு தகவல்

Share This

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா, ஆதார் திட்டம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர், 18 வயதை கடந்தவர்கள் ஏற்கனவே ஆதார் அடையாள எண்ணை பெற்றுவிட்டால் அதிலிருந்து வெளியேறும் வாய்ப்பு இல்லை. எனினும் 18 வயதை கடந்தவர்கள் நடுவன் அரசு அளிக்கும் பயன்களை பெற விரும்பாவிட்டால் ஆதார் திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது" என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து, பெற்றோர்கள், காப்பாளர்கள் அளிக்கும் ஒப்புதலுடன் குழந்தைகள் ஆதார் திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் 18 வயதான பின் அதிலிருந்து வெளியேற விரும்பினால் அதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages