பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை-உயர்நீதிமன்றம் திட்டவட்டம் - Agnipuratchi

பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை-உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

Share This

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசின் எச்சரிக்கையையும், 25ம் தேதி பணிக்கு திரும்பவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையினையும் மீறி தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு அனுமதி வேண்டி மனுதாரர் கோரிக்கை விடுத்தார். அப்போது பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பணிக்கு திரும்ப வேண்டும் என்கிற உத்தரவை மீறிய ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் வேலை என்று தெரிவித்த நீதிபதி, பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்த நோட்டீசிற்கு தடைவிதிக்கப்படவில்லை எனறும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages