முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, தெஹல்கா முன்னாள் பத்திரிக்கை ஆசிரியரான மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் மீது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன் கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த உள்நோக்கமும் இல்லாமல் இந்த ஆவண படம் வெளியிடபட்டதாக சாமுவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனக்கு எதிராக, ஆதாரமற்ற குற்றச்சாட்டை கொண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் மேத்யூ சாமுவேல் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று வழங்கிய உத்தரவில், இரு தரப்பினர் இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு 4 வார காலம் தடை விதித்தார். வழக்கு விசாரணையும் 4 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோடநாடு விவகாரம்-மேத்யூ சாமுவேல் மீதான வழக்குக்கு இடைக்கால தடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment