குக்கர் சின்ன விவகாரம்-தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

குக்கர் சின்ன விவகாரம்-தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Share This

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் நிரந்தரமாக பயன்படுத்த குக்கர் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுபக்கம் தமிழகத்தில் தற்போது உடனடியாக எந்த ஒரு தேர்தலும் நடைபெற வாய்ப்பில்லை. அதனால், குக்கர் சின்னத்தை டிடிவி.தினகரனுக்கு ஒதுக்கீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 
இதனையடுத்து, இன்றைய வழக்கு விசாரணையில், தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. மேலும், குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா, வேண்டாமா⁉என்பது குறித்தும் விளக்கமளிக்க ஆணையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages