சென்னையில் டீசல் டோர் டெலிவரி சேவை துவக்கம் - Agnipuratchi

சென்னையில் டீசல் டோர் டெலிவரி சேவை துவக்கம்

Share This

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் புனே மற்றும் மகாராஷ்டிராவில் டீசல் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்கியது. தற்போது இந்தச் சேவையை சென்னையிலும் தொடங்கியுள்ளனர். இதற்காக தீப்பற்றாத இன்ஸுலேட்டட் டேங்கர் லாரிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் உள்ளது போன்ற டீசல் விநியோகிக்கும் இயந்திரங்கள் டேங்கர் லாரிகளில் பயன்படுத்தப்படுகிறது. டீசல் மட்டும் ஹோம் டெலிவரி செய்யப்படுவதால் வணிக வாகனங்கள் பெருமளவில் இந்தச் சேவையை பெற்று பயன்பெறுவார்கள். அதே நேரம் குறைந்தது 200 லிட்டர் டீசல் ஆர்டரை அளிக்கும்போது மட்டுமே ஹோம் டெலிவரி செய்யப்படும். இதுவே 2,500 லிட்டருக்கும் அதிகமாக ஹோம் டெலிவரி செய்யவேண்டும் எனில் பெட்ரோலிய மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து உரிமம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages