திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை விசாரணை ஆணையம் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தான், சந்தேகம் எழுப்பினேன். ஆனால் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்க முடியாதவர்கள் அமைச்சர்களை மிரட்டும் வகையில் செயல்படுகிறார்கள் என்று கூறினார். மேலும், பேசிய அவர், "சந்தேகம் என்று வந்துவிட்டால் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி எவ்வளவு உயர்பதவியில் இருப்பவர்களையும் கேள்வி கேட்க அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. வேலைக்காரர்களாக வந்த தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெயலலிதாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எனவே, ஜெயலலிதாவின் மரணத்திற்கு அவர்கள் தான் காரணம். ஆனால் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு தினகரன் வாய்க்கு வந்தபடி பேசி கொண்டிருக்கிறார். அனைத்திற்கும் பதிலடி கொடுத்தால் தினகரானால் தாங்க முடியாது" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
ஜெயலலிதா மரண விவகாரம்-ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் கண்டனம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment