சிபிஐக்கு புதிய இயக்குனரை நியமனம் செய்வது குறித்து மோடி தலைமையில் குழு - Agnipuratchi

சிபிஐக்கு புதிய இயக்குனரை நியமனம் செய்வது குறித்து மோடி தலைமையில் குழு

Share This

சிபிஐக்கு புதிய இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மூன்று நபர் கொண்ட தேர்வுக் குழு இன்று கூடுகிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கொண்ட இக்குழு பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக்வர்மாவுக்கு பதிலாக புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய உள்ளது. இக்குழுவில் இடம் பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் சிபிஐ இயக்குனர் நீக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றிருப்பதால் தமக்குப் பதிலாக மூத்த நீதிபதியான ஏ.கே.சிக்ரியை குழுவில் இடம் பெறச் செய்துள்ளார். முன்னதாக, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages