சென்னை அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு - Agnipuratchi

சென்னை அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

Share This

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்சப் பணம் கைமாறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை மின் வாரிய அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத மின் வாரிய தலைமை பொறியாளர் முத்துவின் அலுவலகத்தில் ரூ.1.5 லட்சம் பணம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கம் வெள்ளி நாணயங்களும் சிக்கியுள்ளது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் மின் வாரிய உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரும் லஞ்ச ஒழிப்பு சோதனையின் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு 9 மணிக்கு துவங்கிய சோதனை இரவு முழுவதும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages