ஜாக்டோஜியோ ஸ்டிரைக்கால் முழுநேர ஆசிரியர்களான பகுதிநேர ஆசிரியர்கள் !
அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறதா இவர்களின் பணிச்சுமை !
பழைய ஓய்வூதியம், சம வேலை சம ஊதியம் வேண்டி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து தொடங்கிவிட்டனர். இதனால் அரசு அலுவலகங்களும், பள்ளிகளும் முழுஅளவில் செயல்படவில்லை.
கடந்த 2012ல் ஜெயலலிதா ஆட்சியில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாட்கள் என மாதத்திற்கு 12 அரைநாட்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டது. அதன்படி கணினி, உடற்கல்வி, ஓவியம், தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல்திறன்கல்வியை அதற்கென நியமிக்கப்பட்ட பாட ஆசிரியர்கள் போதித்து வருகின்றனர். ஏழு வருடங்களில் இரண்டுமுறை மட்டுமே ஊதியஉயர்வு தரப்பட்டு தற்போது தொகுப்பூதியம் ரூ.7700 தரப்படுகிறது. இக்குறைந்த தொகுப்பூதியத்தில் இவர்களில் தற்போது 12000பேர் மட்டுமே பணிபுரிந்துவருகின்றனர்.
2015, 2016, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோஜியோ வேலைநிறுத்த போராட்டங்களின்போது பள்ளிகளை பொறுத்தவரை பள்ளிக்கல்வி செயலர், இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு பகுதிநேர ஆசிரியர்களே முழுநேரமும் பணியாற்றிட நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதற்கென கூடுதலாக ஊதியம் எதுவும் தரப்படவில்லை.
வேலைநிறுத்தப்போராட்ட காலங்களில் மட்டுமின்றி, ஆசிரியர் இல்லாத நாட்களிலும் பகுதிநேர ஆசிரியர்களே எல்லா வகையிலும் பள்ளிப்பணிகளை தொய்வின்றி நடத்திட ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதெல்லாம் அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல், எவ்வித அரசு சலுகைகளையும் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர், அவ்வப்போது அரசிடம் குறைந்தபட்ச கோரிக்கையாக தொடர்ந்து முழுநேரப்பணி வழங்க முறையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அரசு செவி கொடுக்கவில்லை.
தற்காலிக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றுவரும் அறிவிப்புகள் இவர்களை கலக்கமடைய செய்கிறது. இதனால் தங்களை குறைகளை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
இம்முறை ஜனவரி 2019ல் இதுபோல ஆணைகள் எதுவும் வழங்காமல் கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை காலை, மாலை என இருவேளைகளும் முழுநேரமும் கட்டாயமாக பள்ளிக்கு சென்று பாடம் நடத்திட நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த 3 நாட்களும் காலை, மாலை என 6 வேலைகளும் பள்ளிப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்களை வைத்து பள்ளிகளை திறக்க முயற்சிக்கும் அரசு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியத்துடன் எல்லா வேலைநாட்களிலும் முழுநேரப்பணியாவது வழங்குமா அரசு என இந்த தருணத்திலாவது அரசு இதனை பரிசீலிக்குமா என்பதை எதிர்பார்த்தே அரசின் உத்தரவுகளை மதித்து செயல்பட்டு வருகின்றனர்.
இவண்,
சி.செந்தில்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, செல்: 9487257203
ஜாக்டோஜியோ ஸ்டிரைக்கால் முழுநேர ஆசிரியர்களான பகுதிநேர ஆசிரியர்கள் !
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment