பொங்கலோ பொங்கல் என பொங்கி வரும் மகிழ்ச்சி திருவிழா. பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பொங்கல் வாழ்த்து - Agnipuratchi

பொங்கலோ பொங்கல் என பொங்கி வரும் மகிழ்ச்சி திருவிழா. பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பொங்கல் வாழ்த்து

Share This

பொங்கலோ பொங்கல் என பொங்கி வரும் மகிழ்ச்சி திருவிழா. தை ..தை ..தை.. என ஆடி வரும் தை மகள் பெருவிழா. 

உழவு செழித்தால் உலகம் செழிக்கும். நிலம், கால்நடை, இயற்கைக்கும் நன்றி பாராட்டும் அறுவடை திருநாள். குழந்தை, பெற்றோர், குடும்பமும் உற்றார், உறவினர், நண்பர்கள் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடும் நன்னாள். பாரம்பரியம் போற்றி, பண்பாடு காத்து, உழைப்பின் உயர்வை உலகுக்கு உணர்த்தும் உன்னதத் திருவிழா ... பொங்கல் திருவிழா....

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே" உழவர் , நெசவாளர், மீனவர் நலன் காத்து,இளைஞர் சக்தி ஆக்கபூர்வமாய் பயன்பட, கண்கள் எனும் பெண்கள் போற்றி பாதுகாத்திட, மாணவச் செல்வங்கள் தரமான கல்விபெற, அரசு அலுவலர்கள், ஆசிரியர், தெழிலாளர் உரிமை பெற, வியாபாரிகள், தொழில் முனைவோர் நலன் பெற, எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து தன்னிறைவடைய, வளமிக்க தமிழகம் அமைதி நிலவிட உறுதியேற்போம். 

தை பிறந்தால் வழி பிறக்கும். தங்கள் குடும்பம் ஒளி வீசட்டும். தாங்களும் குடும்பமும் வளமும் நலமும் பெற்று அன்பும் ஆனந்தமும் பொங்கி பெரும் புகழுடன் நீடுழி வாழ இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். 


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages