கரூர் சாணப்பிராட்டியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, புலியூர் ஆகிய இடங்களில் அரசு மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்திற்கு சென்றுவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். தண்ணீரின்றி விவசாயம் நடைபெறாததுடன் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, புலியூர், ஆகிய இடங்களில் அரசு மணல் குவாரி செயல்பட நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அமராவதி ஆற்றில் 3 இடங்களில் மணல் அள்ள இடைக்காலத் தடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment