தமிழக அரசு, கடந்த ஜனவரி ஒன்று முதல், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதையடுத்து சென்னையில், மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமல்லாமல் உணவுப்பாதுகாப்புதுறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையின் தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவில் திடீர் சோதனை செய்த மாநகராட்சி அதிகாரிகள், பிரபல கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 டன் அளவிலான, பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் எச்சரித்து விட்டு சென்றார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment