டெல்லி தனியார் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ-9 பேர் பலி - Agnipuratchi

டெல்லி தனியார் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ-9 பேர் பலி

Share This

தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் என்ற தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஒட்டலில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 26 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages